பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள மொத்த வீரர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

mumbai indians squad 2025

மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏலத்தின் போது முக்கிய வீரர்களை தங்களுடைய அணிக்கு நிர்வாகம் ஏலத்தில் எடுத்துவிடும். அப்படி தான் இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பாக திட்டம்போட்டு அணிக்கு தரமான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது.

முதல் நாள் ஏலத்தில் இருந்த இடம் தெரியாத வண்ணம் இருந்த மும்பை அணி, இரண்டாம் நாள் ஏலத்தில் புலிப்பாய்ச்சலாகவே மாறினார்கள். அதற்கு உதாரணம் தான் அவர்கள் தேர்வு செய்த பவுலிங் படை. எனவே, இந்த முறை மும்பை அணி அணியில் எந்தெந்த வீரர்களை எடுத்துள்ளார்கள் என்பது பற்றிய விவரமும், அணியில் உள்ள முக்கிய பந்துவீச்சாளர்கள் பற்றிய விவரத்தையும் பார்ப்போம்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் 

  • டிரென்ட் போல்ட் -(ரூ. 12.5 கோடி)
  • நமன் திர் -(ரூ. 5.25 கோடி)
  • ராபின் மின்ஸ் -(ரூ. 65 லட்சம் )
  • கர்ண் சர்மா -(ரூ. 50 லட்சம்)
  • ரியான் ரிக்கல்டன் -(ரூ. 1 கோடி)
  • அல்லா கசன்ஃபர் -(ரூ. 4.80 கோடி)
  • தீபக் சாஹர் -(ரூ. 9.25 கோடி)
  • வில் ஜாக்ஸ் -(ரூ. 5.25 கோடி)
  • அஸ்வனி குமார் -(ரூ. 30 லட்சம்)
  • மிட்செல் சான்ட்னர்- (ரூ. 2 கோடி)
  • ரீஸ் டாப்லி -(ரூ. 75 லட்சம்)
  • ஸ்ரீஜித் கிருஷ்ணன் -(ரூ. 2.60 கோடி)
  • ராஜ் அங்கத் பாவா -(ரூ. 30 லட்சம்)
  • சத்தியநாராயண ராஜு- (ரூ. 30 லட்சம்)
  • பெவோன் ஜேக்கப்ஸ் -(ரூ. 30 லட்சம்)
  • அர்ஜுன் டெண்டுல்கர் -(ரூ. 30 லட்சம்)
  • லிசாட் வில்லியம்ஸ் -(ரூ. 75 லட்சம்)
  • விக்னேஷ் புதூர் -(ரூ. 30 லட்சம்)

தக்க வைத்த வீரர்கள் : ஜஸ்பிரித் பும்ரா (ரூ. 18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (16.35 கோடி),
ரோஹித் சர்மா (ரூ. 16.3 கோடி),திலக் வர்மா (ரூ. 8 கோடி) ஆகியோரை தக்க வைத்திருந்தார்கள்.

தரமான பந்துவீச்சாளர்கள்

இந்த முறை மும்பை அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக உள்ளனர் என்றே சொல்லலாம். ஏனென்றால், அணியில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய பந்துவீச்சு தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அதைப்போல டிரென்ட் போல்ட் 16 விக்கெட்கள் எடுத்திருந்தார்.

தீபக் சாஹர் 5 போட்டிகள் விளையாடி 8 விக்கெட்கள் எடுத்திருந்தார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விக்கெட் எடுத்து கொடுக்கக்கூடிய அளவுக்கு சிறப்பான பந்துவீச்சாளர்களை இந்த முறை மும்பை எடுத்துள்ளதால் இவர்களுடைய பந்துவீச்சு படைபலம் அணியின் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கேப்டன் ஹர்திக் இல்லையா?

மேலும், மும்பை அணியை பற்றி கூடுதலாக பரவி வரும் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால்,  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்பது தான். ஏனென்றால், அணி நிர்வாகம் இந்த முறை சூர்யகுமார் யாதாவிற்கு அந்த வாய்ப்பை வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்