PAKvsSL:பேட்டிங்கில் சொதப்பல்..! உஸ்மானின் அதிரடி பந்து வீச்சில் சரிந்த இலங்கை அணி..!

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.
நேற்று இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
306 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரராக தனுஷ்க ,
சதீரா இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே இலங்கை அணி விக்கெட்டை பறிகொடுத்தது.
தனுஷ்க 14 , சதீரா 6 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து இலங்கை அணி விக்கெட்டை இழந்து 28 ரன்னிற்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது. பின்னர் மத்தியில் இறங்கிய ஜெயசூரியா , தாசுன் இருவரும் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்சூர்யா சதம் அடிக்காமல் 96 ரன்களில் வெளியேறினார். பின்னர் தாசுன் 68 ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 46.5 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்து வீச்சில் உஸ்மான் 5 விக்கெட்டை பறித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025