பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தொடங்க உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், ஹரிஸ் சோஹைல், இப்திகார் அகமது, சர்பராஸ் அகமது (கேப்டன் / விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், வஹாப் ரியாஸ், சதாப் கான், முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் இடம் பெற்றனர் .
இலங்கை அணி வீரர்கள்:
அவிஷ்கா பெர்னாண்டோ, ஓஷாடா பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே (கேப்டன் ), சதீரா சமரவிக்ரமா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலக, ஷெஹான் ஜெயசூரியா, தாசுன் ஷானகா, இசுரு உதனா, வனிந்து ஹசரங்கா, நுவான் பிரதீப், லஹிரு குமாரா ஆகியோர் இடம் பெற்றனர் .
கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் தான் பாகிஸ்தானில் சர்வேதேச ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…