PAKvsSL: அதிரடி காட்டிய பாபர் ஆசாம்..! 306 ரன்கள் இலக்காக வைத்த பாகிஸ்தான் ..!
பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்கி உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இமாம்-உல்-ஹக் ,ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினார்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இமாம்-உல்-ஹக் 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் பாபர் ஆசாம் , ஃபக்கர் ஜமான் இருவரும் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய ஃபக்கர் ஜமான் 65 பந்தில் 1 சிக்சர் , 6 பவுண்டரி என அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார். பிறகு அதிரடியாக விளையாடிய பாபர் ஆசாம்105 பந்து 115 ரன்கள் குவித்தார். அதில் 4 சிக்சர், 8 பவுண்டரி அடங்கும். பின்னர் இறங்கிய ஹரிஸ் சோஹைல் 40 ரன்னுடன் தனது விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் அடித்தனர்.இலங்கை அணியில் வாணிந்து 2 விக்கெட்டை பறித்தார். 306 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.