2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தானின் புதிய ஜெர்ஸி அறிமுகம்!
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய ஜெர்சியின் முன் கூட்டியே ஆர்டரைத் தொடங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 5ம் தேதி மோதவுள்ளது.