பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் அடித்தனர். இலங்கை அணியில் வாணிந்து 2 விக்கெட்டை பறித்தார்.306 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை இழந்து 46.5 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் அதிரடியாக விளையாடிய 105 பந்தில் 115 ரன்கள் குவித்தார்.அதில் 4 சிக்ஸர் , 8 பவுண்டரி அடங்கும். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 11 சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும் மூன்றாமிடத்தில் இருந்த இந்திய கேப்டன் கோலியை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் பின்னுக்கு தள்ளி உள்ளார்.
அம்லா – 64 இன்னிங்ஸ்
டி கோக் – 65 இன்னிங்ஸ்
பாபர் – 71 இன்னிங்ஸ் *
கோலி – 82 இன்னிங்ஸ்
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…