இந்திய கேப்டன் கோலியை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ..!

Default Image

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று இரண்டாவது போட்டி கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் அடித்தனர். இலங்கை அணியில் வாணிந்து 2 விக்கெட்டை பறித்தார்.306 ரன்கள் இலக்குடன்  களமிறங்கிய இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை இழந்து 46.5 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் அதிரடியாக  விளையாடிய 105 பந்தில் 115 ரன்கள் குவித்தார்.அதில் 4 சிக்ஸர் , 8 பவுண்டரி அடங்கும். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 11 சதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளது.
மேலும் மூன்றாமிடத்தில் இருந்த இந்திய கேப்டன் கோலியை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம்  பின்னுக்கு தள்ளி உள்ளார்.
அம்லா – 64 இன்னிங்ஸ்
டி கோக் – 65 இன்னிங்ஸ்
பாபர் – 71 இன்னிங்ஸ் *
கோலி – 82 இன்னிங்ஸ்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்