நெகிழ்ச்சி சம்பவம் .!இந்தியருக்கு பந்தை பரிசாக கொடுத்த பாகிஸ்தான் வீரர்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் ஒரு பந்தை பரிசாக கொடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் மேலபோர்னே ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிஸான்ஸ் இரு அணிகளும் மோதின.
இப்போட்டியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிற்கு பதிலாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்ஹாரிஸ் ரவூப் மேலபோர்னே ஸ்டார்ஸ் அணியில் இடம் பிடித்தார்.
இவர் பாகிஸ்தான் அணியில் விளையாட வில்லை என்றாலும் பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இதன் மூலம் மிகவும் பிரபலமானார். நேற்று முன்தினம் போட்டியில் முதலில் இறங்கிய மேலபோர்னே ஸ்டார்ஸ் 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஹோபார்ட் ஹரிஸான்ஸ் அணி இறங்கியது.இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ரவூப் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் 111 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
Haris Rauf gave his 5fa wicket ball to a complete stranger who he met before the game ????@BKTTires | #BBL09 pic.twitter.com/f2s1YMmIkI
— KFC Big Bash League (@BBL) December 22, 2019
இந்தப் போட்டியில் ஹாரிஸ் ரவூப்க்கு 5 விக்கெட்டை வீழ்த்த உதவிய பந்தை மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு அந்த பந்தை ஹாரிஸ் ரவூப் பரிசாக கொடுத்தார்.
பிறகு பேசிய நான் போட்டிக்கு வந்தபோது பாகிஸ்தானை சேர்ந்தவன் என கூறியதை அடுத்து அந்த இந்திய பாதுகாவலர் தன்னை கட்டியணைத்து கண்ணீர் விட்டதாக ஹாரிஸ் ரவூப் கூறினார். அதன் காரணமாகவே தான் பந்தை அவருக்கு பரிசாக கொடுத்ததாக அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)