மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரருக்கு 17 மாத சிறை தண்டனை.!
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பிப், மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சகவீரர்களை ஊழலில் (மேட்ச்பிக்சிங்) ஈடுபடத் தூண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டுக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஜாம்ஷெட் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் குற்றவாளிகள் இருவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரிட்டிஷ் நேஷனல் கிரைம் ஏஜென்ஸி விசாரித்து வந்தது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு வங்கதேச சூப்பர் லீக் மற்றும் 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் மேட்ச்பிக்சிங்கில் சக வீரர்களை ஈடுபட தூண்டியதாக ஜாம்ஷெட் மீது புகார் எழுந்தது.
புகாரைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாம்ஷெட், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான யூசுப், முகமது இசாஜ் இருவரும் பாகிஸ்தான் வீரர்களுக்குப் பணம் கொடுத்து மோசமாக விளையாடத் தூண்டினோம் என உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் இசாஜ்கு 30 மாதங்களும், அன்வருக்கு 40 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டியில் தான் மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என்று தொடக்கத்தில் கூறிவந்த ஜாம்ஷெட் பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டில் வீரர்களிடையே லஞ்சம் பெறுவதை ஊக்கப்படுத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஜாம்ஷெட் தடை விதிக்கப்பட்டார். அதற்கு முன்பாக 2017-ம் ஆண்டில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றத்துக்காக 12 மாதங்கள் தடையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பாகிஸ்தான் அணியின் இடதுகை பேட்ஸ்மேனான ஜாம்ஷெட் 2 டெஸ்ட், 48 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.