அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது போட்டியில் இலங்கை மகளிர் அணி 20 ஓவருக்கு வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துளளது.

PAKWvsSLW

ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஓப்பனிங் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சொற்பரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய அனைத்து வீராங்கனைகளும் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மோசமாக தடுமாறியது. அதன் பிறகு பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டனான பாத்திமா சனா களமிறங்கி அணிக்காக ரன்களை சேர்த்தார். அவரது ஒரு சிறிய கேமியோவால் மட்டுமே பாகிஸ்தான் மகளிர் அணி 100 ரன்களைக் கடந்தது.

ஆனால், அவரும் 30 ரன்கள் இருப்பினும் தட்டி தட்டிய ரன்களைச் சேர்த்த பாகிஸ்தான் மகளிர் அணி இறுதியில் 10 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும், சிறப்பாக பந்து வீசிய இலங்கை மகளிர் அணியின் சாமரி அதபத்து, சுகந்திகா குமாரி, பிரபோதனி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

மிகச் சிறிய இலக்கான 117 என்ற ரன்களை எடுக்க இலங்கை மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இலங்கை அணி தொடர் சொதப்பல் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. மேலும், ஒரு பாலுக்கு ஒரு ரன்களை எடுக்க கூட தடுமாறியது.

அந்த அளவிற்கு பாகிஸ்தான் மகளிர் அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. அதிலும், சாடியா இக்பால் 3 விக்கெட்டும், பாத்திமா சனா, ஒமைமா சோஹைல், நஷ்ரா சந்து தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இலங்கை மகளிர் அணியை ரன்ஸ் எடுக்க விடாமல் தடுமாற செய்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 33 ரன்கள் விதியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி போட்டியில் வெற்றிப் பெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக நிலக்ஷி 22 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் மகளிர் அணி நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்று அசத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்