ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நோமன் அலி!

Noman Ali

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில், அந்த போட்டியில் ஆஸ்ரேலியா அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி MCGயில் தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் இருந்து வீரர்கள் தொடர்ச்சியாக விலகியுள்ளார்கள்.

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்கு முன்பு பாஸ்கிஸ்தான் அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது, அப்போது பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளார் அப்ரார் அஹ்மதுக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவரால் விளையாட முடியாமல் போனது. இதனால் அவர் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை.

சொந்த அணிக்கு துரோகம்.. டி20 உலகக்கோப்பையில் வேறு அணிக்கு பயிற்சியாளராக பொல்லார்ட்..!

அதைப்போல, காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத்வும் அணியில் இருந்து விலகினார்.  அவர்களை தொடர்ந்து அடுத்ததாக தற்போது குடல் அழற்சி காரணமாக நோமன் அலி ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார்.  (பிசிபி) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, நோமனுக்கு லேப்ராஸ் கோப்பிக் குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக  மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அப்ரார் அகமது அணியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து குர்ரம் ஷாசத்வும் அணியில் இருந்து விலக அடுத்ததாக தற்போது நோமன் இல்லாதது பாகிஸ்தானின் அணியின் பந்துவீச்சை கவலைக்கிடமாக ஆக்கியுள்ளது. மேலும், விரைவில் இவர்கள் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்