கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பாதுகாப்பு படையினரும் , 2 பொதுமக்களும் இறந்தனர். இந்த தாக்குதலால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கு போட்டி நடத்தாமல் இருந்து வந்தது.
மேலும் பாகிஸ்தான்சென்று விளையாட மற்ற நாட்டு வீரர்கள் பயந்து வந்தனர். இதனால் பாகிஸ்தான் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி செயல் பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து பாகிஸ்தானில் விளையாடி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டு நடைபெற்ற “பாகிஸ்தான் சூப்பர் லீக்” தொடரில் பெஷாவர் ஜால்மி அணி டேரன் சேமி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. பாதுகாப்பு காரணங்களால் மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில் தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது.
வருகின்ற மார்ச் 23-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி குடியுரிமைக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.
உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…
வேலூர்: திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட…
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…