சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு – பாகிஸ்தான் வீரர் அறிவிப்பு!

Default Image

சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீர‌ர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டியில் அறிமுகமான முகமது ஹபீஸ், கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 2020 டி20 உலகக் கோப்பை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.

ஆனால், கொரோனா காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததால் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். முகமது ஹபீஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 119 டி20 போட்டிகளில் விளையாடி 12,780 ரன்களையும், 253 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார்.

இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பெருமையுடனும் திருப்தியுடனும் விடைபெறுகிறேன் என்று ஹபீஸ் தெரிவித்துள்ளார். உண்மையில், நான் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிகமாக சம்பாதித்து சாதித்துள்ளேன்.

அதற்காக எனது சக கிரிக்கெட் வீரர்கள், கேப்டன்கள், துணை ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கேரியரில் எனக்கு உதவியது எனவும் குறிப்பிட்டார். 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் தேசிய கிட் அணிவதற்கு தகுதியானவராக கருதப்பட்டதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்