சமியின் மனைவி புதிய புகார் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களை அறிமுகம் செய்து வைத்ததே லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவர் தான் என தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரில் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூதாட்டப் புகார் ஒன்றையும் ஜஹான் கூறியதால் பிரச்சனை பூதாகரமானது. இந்த நிலையில் சூதாட்டத்திற்காக பணத்தைக் கொடுத்த லண்டனை சேர்ந்த தொழிலதிபர் முகமது […]
மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே தனி சிறப்பு தான் என கூறியுள்ளார். சென்னை அடையாறில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் உரையாடினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
58 ரன்களுக்கு இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில், நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட் மற்றும் சௌதியின் பந்துகளில் இங்கிலாந்து அணி முற்றிலும் சிதறியது. போல்ட் 6 விக்கெட்கள் எடுக்க, சௌதி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரு சமயத்தில், 27 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது இங்கிலாந்து. ஆனால், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஒவர்டன், 33 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து 58 ரன்களை பதிவு […]
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒரு கேப்டனுக்கான சரியான உதாரணம் விராத் கோலிதான் என்று கூறினார். ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் விராத் கோலியிடம் பார்த்தே வந்திருக்கிறேன். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நான் கேப்டனாக இருந்த போது, அணியில் விராத் கோலியும் இருந்தார். அப்போது இளம் விராத், அணியில் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று, தன்னைத்தானே வளர்த்து சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் […]
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு […]
டிஆர்எஸ் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை முதல் முறையாக அறிமுகமாகிறது. பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது.போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை, முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் […]
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர் சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன் ஜடேஜா – ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு – விக்கெட் […]
நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். இதனையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், […]
வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை தகுதி சுற்றுகான போட்டியில் ஸ்காட்லாந்து அணிவுடன் நடந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேயில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டியுள்ளன. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய […]
வரும் 23ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சந்தித்து குறைகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் முகமது ஷமி மீது குடும்ப வன்முறை, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்து வரும் ஹசின் ஜஹான், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து தமது பிரச்சனைகளை எடுத்துக்கூற நேரம் ஒதுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார். ஷமிக்கு எதிராக புகார்களை கூறியிருப்பதால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் […]
ஆஸ்திரேலிய கேட்பன் ஸ்மித்துக்குப் காகிசோ ரபாடா தன் மேல் முறையீட்டில் வெற்றி பெற்று தடை நீக்கம் பெற்றது பிடிக்கவில்லை. இனி பேட்ஸ்மெனை அனுமதிக்கக் கூடிய அளவுக்கு இடிக்கலாம் என்பது போல் மேல்முறையீட்டு முடிவு உள்ளது என்று சாடினார். 6 மணி நேர மாராத்தான் விசாரணையில் ஸ்மித் மீது ரபாடா இடித்தது லேசானதுதான் ஐசிசி வர்ணித்த அளவுக்கு அது மோசமாக இல்லை மேலும் வேண்டுமென்றெல்லாம் இடிக்கவில்லை என்று கூறி அவரது அபராதம், தகுதியிழப்புப் புள்ளியை குறைத்து தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனால் […]
பிசிசிஐ , ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் துவக்க விழாவில் ரோஹித், தோனியை தவிர மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ள அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களாக விராட் கோலி, அஷ்வின், கவுதம் கம்பிர், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான 6ம் தேதி, ஸ்பெஷல் வீடியோ […]
போலீசில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது இது குறித்து ஹசின் ஜஹன் கூறியது ,அலிஸ்பா முகமது ஷமியின் ரசிகர் கிடையாது. அலிஸ்பா, முகமது ஷமியின் பெண் தோழியாக இருக்கலாம். அவர் விபசாரம் செய்பவராகவும் இருக்கமுடியும். வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண், ஒரு ஆணை ரகசியமாக சந்தித்து பேசிஉள்ளார், அறையை […]
ரசிகர்கள் பட்டாளம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அதிகம். அதேபோல், அவரும் தனது ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். இந்நிலையில், சமீபத்தில் தோனி தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக கட்டிடத்தின் விளிம்பில் நின்றது பரபரப்பை ஏற்படுட்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. சிலர் தோனியின் இந்த செயலை பாராட்டினாளும் சிலர் இவ்வாறு செய்வது ஆபத்தானது என விமர்சிக்கவும் செய்துள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
கோல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 […]
ட்ரெண்டிங்க் என்றாலே ஐபிஎல் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். […]
பி.சி.சி.ஐ. இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை புகார்கள் மற்றும் அவரது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்திய அணியில் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் குறித்த தகவல்களை பி.சி.சி.ஐயிடம் போலீசார் கோரியிருந்தனர். இதனிடையே ஹாசின் ஜகானால் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் பெண்ணான அலிஷ்பா (Alishba) […]