முத்தரப்பு நிதாஷா கோப்பை டி20-ல் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் விளையாடி வரும் போட்டியின் முக்கிய ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் இலங்கை அணியை முலில் பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து இலங்கை முதலில் களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 160 ரன்கள் […]
காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் புகார் அளித்துள்ளார். மேலும் ஷமி மீது மேட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டையும் அவர் கூறினார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தன் மீதான புகார்களைத் தீர விசாரிக்க வேண்டும் […]
மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் ஜொலிக்க தவறியதன் காரணமாக 197 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திறன் மற்றும் உடல்தகுதியை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி ,அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது. ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணி வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை, இப்போது இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் விதமாக ஏராளமான தொழில்நுட்பங்களையும், நவீன முறைகளையும் பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் […]
முத்தரப்பு டி20 போட்டியில் இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது. முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரருமான எல். பாலாஜி ‘தோனி போல சிறந்த கேப்டன் இல்லை’ என்று கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ஓர் அணியை வழிநடத்த தோனியை விட சிறந்த வீரர் யாருமில்லை. பல பந்துவீச்சாளர்களை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பந்துவீச்சாளரையும் அவர்களது ஸ்டைலை மாற்றி பந்துவீச அவர் வற்புறுத்துவதில்லை. பந்துவீச்சாளரின் ஸ்டைலுக்கே விட்டுவிடுகிறார். தோனி, களத்தில் சுதந்தரம் கொடுப்பார். எந்த நேரத்தில் யாரை பந்துவீச செய்யலாம் […]
மேற்குவங்க பள்ளி தேர்வில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில10ஆம் வகுப்பு தேர்வில் கோலி குறித்து வினா கேட்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் தேர்வில் கோலி குறித்தக் கேள்வியைக் கண்ட மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. அதுவும் கேட்கப்பட்டது 10 மதிப்பெண் வினா. அதில் கோலி குறித்து கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விக்கு மாணவர்கள் உற்சாகத்துடன் பதிலளித்துள்ளனர். சும்மாவே நமது மாணவர்கள் கட்டுரை தீட்டுவார்கள் கோலி குறித்த கேள்வி என்றால் […]
போலீசில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மீது அவருடைய மனைவி திடுக்கிடும் புகார்களை சமீபத்தில் அடுக்கி கொண்டே போனார் என்பதும் இதுகுறித்து அவர் புகார் அளித்துள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஷமியை எனக்கு நன்றாக தெரியும், அவர் நாட்டுக்கும் வீட்டுக்கும் துரோகம் செய்ய மாட்டார் என்றும் தல தோனி சர்டிபிகேட் கொடுத்திருந்தார் இந்த நிலையில் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர் என்றும், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக […]
வருகிற 22ம் தேதி மும்பையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் போட்டி தொடங்குகிறது. ஹர்மன்பிரித் கபூர் தலைமையில் களமிறங்கும் இந்திய மகளிர் அணியில் பந்து வீச்சாளர் ஜூலன் கோசுவாமி இடம்பெற்றுள்ளார். மேலும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தென்னாப்பிரிக்க வீரர் பால் ஹாரிஸ் , தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் கோமாளித்தனமாக இருந்ததாக விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றிய ரபாடா, ஆக்ரோஷமாக கத்தியதோடு, ஸ்மித்தின் தோளில் இடித்தார். ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால், எஞ்சிய 2 […]
ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் ரன்களை குவிக்க போராட வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல வாணொலிக்கு அவர் அளித்த பேட்டியில் ஓரே விதமான பந்து வீச்சில் தொடர்ந்து அவுட் ஆகும் வழக்கம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அந்த தவறை திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது என்றும் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை, பாராட்டியுள்ளார். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி, 176 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 89 ரன்களும் சுரேஷ் ரெய்னா 47 […]
தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என, ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, அவுட்டாக்கிய ரபாடா அவரது தோள் மீது உரசி ஆர்ப்பரித்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் […]
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை பார்க்கும்போது இந்திய அணி 130 -140 ரன்கள் தான் குவிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ரோகித் […]
ரோகித் ஷர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை […]
இந்தியா-வங்கதேசம் அணிகள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கவுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இந்திய அணி […]
நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவர் ஐபிஎல் போட்டி மற்றும் அவரது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளார். நியூசிலாந்து அணி: ஜீத் ராவல், டாம் லதாம், […]
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எப்படி வீணாக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் போட்டி நடக்கும் 9 மாநிலங்களுக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), மத்திய அரசும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் நகரைச் சேர்ந்த ஹைதர் அலி என்ற இளைஞர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஹைதர் அலி சார்பில் வழக்கறிஞர்கள் பிரஹம் சிங், […]
இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி மீது அவரது மனைவி வைத்த புகார் காரணமாக அவர் சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் கேள்விகுறியாக உள்ளது. ஷமியின் மனைவி புகார் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் […]