இதே நாளில் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஓய்வை அறிவித்த தோனி ..!

Published by
murugan

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்று(அதாவது இதே நாளில்)  எம்.எஸ். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். 2014-15 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் தொடரின் போது இந்த முடிவை அறிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி முடிந்ததும், தோனி எந்த முன்னறிவிப்பும் இன்றி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கோட்ஸி விலகல்..!

அதில்” தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். “இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவரான இந்திய டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாக மாற்றிய எம்.எஸ். தோனி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதில் உள்ள சிரமம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு தோனி செய்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எம்.எஸ்.தோனியின் முடிவை மதிக்கும் அதே வேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்கும், இந்தியாவிற்கு அவர் கொண்டு வந்த விருதுகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. விராட் கோலி நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில்  இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என தெரிவித்தது.

 கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி:

தோனி தனது கடைசி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 24* ரன்கள் எடுத்தார். போட்டி டிராவில் முடிந்தது. 384 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணி 66 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி விளையாடவில்லை. அவர் இல்லாத நேரத்தில், விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்.  சர்வதேச அளவில் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தது அதுவே முதல் முறை.

மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டனாக கோலி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டனாக தோனி ஒருமுறை சாதனை படைத்தார். 60 டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவை 27 வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றார். 2019 ஆம் ஆண்டு பிறகு தான் கோலி டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 38.09 சராசரியில் 4876 ரன்களையும், 6 சதங்கள் மற்றும் 33 அரைசதங்களுடன் 59.11 ஸ்ட்ரைக்-ரேட்டையும் எடுத்தார். 2013 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

10 hours ago

“முதலில் களத்திற்கு வர சொல்லுங்க”..த.வெ.கவை சாடிய அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…

12 hours ago

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

13 hours ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

13 hours ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

13 hours ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

14 hours ago