ஒலிம்பிக் போட்டிகள் : எதற்காக 4 வருட இடைவேளை? இதுதான் காரணமா?

olympic Games

ஒலிம்பிக் : டோக்கியோ, ரியோ, பாரிஸ், சொச்சி போன்ற இடங்களில் 4 வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் பல உலகநாடுகளும், பல வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடி பதக்கங்களை வென்று தங்களது நாட்டிற்கு பெருமைகள் சேர்ப்பார்கள்.

ஒரு விளையாட்டின் மீதுள்ள ஒரு ரசிகனாய் நாமும் அதனை கண்டு மகிழ்வோம். ஆனால், என்றைக்காவது நாம், எதற்காக இந்த 4 வருட இடைவேளை விட்டு இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று யோசித்திருக்கோமா?

இதற்கு ஒரு சிலர் கூறும் காரணம் என்னவென்றால் ஒரு போட்டிக்காக வீரர்கள் தங்களை முழுமையை தயார் படுத்தி கொள்வதற்காக எடுத்து கொள்ளும் கால அவகாசமே என்று கூறுவார்கள். ஆம், அதுவும் ஒரு காரணம் என்று வைத்து கொள்ளலாம்.

ஆனால், ஊண்மையான காரணம் என்னவென்றால் பண்டைய காலத்தில் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றது. ஆனால், அப்போது தேதி, மாதம் இதனை கணக்கிடுவதற்கான நாம் தற்போது உபயோகிக்கும் காலண்டர் போன்ற நாட்காட்டிகள் கிடையாது.

அதற்கு பதிலாக ஒலிம்பியாட் என்ற ஒரு காலக்கணக்கீடு இருந்தது, அதாவது ஒரு ஒலிம்பியாட் எனப்படுவது 4 வருடத்திற்கு சமமாகும். அதன் அடிப்படையில் தான் 4 வருடத்திற்கு ஒரு முறை ஒலிம்பியாட் தொடங்கும் போது கிரீஸ் நாட்டின் மக்கள் அங்கிருந்த ஜீயஸ் என்ற கிரேக்க கடவுளை வணங்கி, அவருக்கு மரியாதையை செலுத்தும் வகையில் இந்த போட்டிகளை நடத்தி  கொண்டாடுவார்கள்.

அதனை அப்படியே தொடர்ச்சியாக நடத்தி வந்தனர், பின் 19-ஆம் நூற்றாண்டில் மாடர்ன் ஒலிம்பிக்ஸ் எனும் பெயரில் மீண்டும் தொடங்கினார்கள். அதே நூற்றாண்டில் தான் அதாவது 1894-ஆம் ஆண்டு தான் புதிதாக இந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் உருவாகி இருந்தது.

அவர்கள், பண்டைய காலத்தில் எப்படி 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தினார்களோ, அதன்படி 4 வருடத்திற்கு ஒரு முறை இந்த மாடர்ன் ஒலிம்பிக்ஸ்ஸை நடத்தலாம் என்ற தீர்மானத்திற்கு வந்தனர்.

அதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற பல ஒலிம்பிக் தொடரானது இந்த மிகவும் மோசமான பேரிடர்கள் அல்லது நடத்த முடியாத சூழ்நிலைகள் பலவும் வந்துள்ளது, இதனால் பல முறை ஒலிம்பிக் போட்டிகள் தடைபட்டாலும் முடிந்த அளவுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி வந்தார்கள்.

ஆனால், இதனை தாண்டி வேறு எந்த காரணங்களுக்காகவும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமல் இருந்ததில்லை. இருப்பினும் சம்மர் ஒலிம்பிக்ஸ், குளிர்கால ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் மற்றும் யூத் ஒலிம்பிக்ஸ் என வகைவகையாக இருந்தாலும் இவைகள் அனைத்தும் தொடர்ந்து நடந்தாலும் 4 வருட இடைவேளைகள் இருக்காது.

ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த ஒலிம்பிக் தொடர்கள் நடத்தப்படும் போது 4 வருட இடைவேளைகள் இருக்கும். அதாவது, ஒரு சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்தால், 4 வருடங்களுக்கு பிறகே அடுத்த சம்மர் ஒலிம்பிக்ஸ் தொடர் நடைபெறும். இதேவிதிகள் மற்ற ஒலிம்பிக் தொடர்களிலும் கடைபிடித்து நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS
magizh thirumeni