ஜப்பானில் கொரோனோ எதிரொலி.. இந்த முறை ஒலிம்பிக் ரத்தாகிறது…

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம், ‘கோவிட்-19’ எனும் கொரோனா வைரஸ் பரவியது.2000க்கும் அதிகமான உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலால், இது ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைக்கவோ திட்டமில்லை. மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டால், இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு, கப்பல் பயணிகள் மூலம் ஜப்பானுக்கும் பரவி உள்ளதால், ஒலிம்பிக் கமிட்டி இந்த முடிவு எடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025