ஒலிம்பிக் ஹாக்கி: வாழ்வா?சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி…!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 4-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

தொடர் தோல்வி:

அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும்  2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து,கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி,நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது.

முதல் வெற்றி:

இவ்வாறு தொடர்ந்து 3 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிறகு,இன்று  நடைபெற்ற பெண்கள் ஹாக்கி போட்டியில் அயர்லாந்து அணியை,இந்தியா 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று,தோல்வியில் இருந்து மீண்டு எழுந்தது.

வாழ்வா?-சாவா? :

இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி கடைசி லீக்கின் வாழ்வா?-சாவா? போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வந்தனா கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில்,கடைசியில் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எரின் ஹண்டர் கோல் அடிக்க 2-2 என்ற கணக்கில் மீண்டும் சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து,போட்டியின் இறுதியில்,தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 4-3 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.இப்போட்டியில் வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.ஒருவேளை தவறும் பட்சத்தில் இந்தியா ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற வேண்டியிருந்திருக்கும்.ஆனால்,இந்திய அணி தோல்வியிலிருந்து மீண்டு வந்து பதக்கத்தை நோக்கிய பயணத்தில் முன்னேறிச் செல்கிறது.

இந்தியா XI:கோச் – ஸ்ஜேர்ட் மரிஜ்னே.

சவிதா புனியா (GK), டீப் கிரேஸ் ஏக்கா, குர்ஜித் கவுர், உதிதா, நேஹா கோயல், மோனிகா மாலிக், ராணி ராம்பால் (C), நவநீத் கவுர், வந்தனா கட்டாரியா, நவ்ஜோத் கவுர், நிஷா.

தெற்கு ஆப்பிரிக்கா XI: கோச் – ராபின் வான் ஜின்கெல்.

எரின் ஹண்டர் (c), சார்ன் மடாக்ஸ், டார்ரின் கிளாஸ்பி, குவானிடா பாப்ஸ், ஃபுமேலெலா எம்பேண்டே (GK), லிசா டீட்லெஃப்ஸ், லிலியன் டு பிளெசிஸ், கிறிஸ்டன் பாட்டன், டாரின் மல்லெட், செலியா சீரானே, மரைசன் மரைஸ்.

Published by
Edison

Recent Posts

‘இனிமே இது தான்’…சிறுத்தையை தூக்கியெறிந்து லோகோவை மாற்றிய ஜாகுவார்!

டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026…

4 mins ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (21/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி…

16 mins ago

உ.பி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க இடையூறு? 7 போலீசார் சஸ்பெண்ட்!

லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று…

31 mins ago

“நாங்களும் விவாகரத்து செய்கிறோம்”…ரஹ்மானின் கிட்டாரிஸ்ட் மோகினி தே அதிர்ச்சி அறிவிப்பு!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…

55 mins ago

AUS vs IND : ரோஹித் இல்லை..இந்திய அணியால் வெல்ல முடியுமா? வெற்றி வியூகம் என்ன?

பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

1 hour ago

சபரிமலை செல்பவரா நீங்கள்? இந்த முக்கிய ‘வாட்ஸ்அப் AI’ தகவல் உங்களுக்கு தான்!

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை…

2 hours ago