இன்ஸ்டாகிராமில் நீரஜ் சோப்ராவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா,அந்த வெற்றி பெற்ற பிறகு, மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஏனெனில்,ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்ற முதல் தடகள வீரர் நீரஜ் ஆவார். இந்த வெளிப்படையான சாதனை அவரை ஆன்லைன் நிகழ்வாகவும், சமூக ஊடக நட்சத்திரமாகவும் மாற்றியுள்ளது.
தற்போது,சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் பங்குகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.அந்த வகையில்,யூகோவ் ஸ்போர்ட் என்ற ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையின்படி,நீரஜ் சோப்ராவின் புகழ் உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல,பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் போது இன்ஸ்டாகிராமில் உலக அளவில் ‘அதிகம் குறிப்பிடப்பட்ட’ விளையாட்டு வீரராக, 1.4 மில்லியனுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் 2.9 மில்லியனுக்கும் அதிகமான சோப்ரா பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார்கள்.
இதன் காரணமாக, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் சோப்ராவின் செல்வாக்கு சுமார் 412 மில்லியனை எட்டியுள்ளது. இந்த அனைத்து தகவல்களும் இணைந்து நீரஜ் சோப்ராவின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மொத்த சமூக ஊடக மதிப்பீட்டை ரூ.428 கோடிக்கு உயர்த்தியுள்ளது என்று பிசினஸ் இன்சைடர் மற்றும் யூகோவ் ஸ்போர்ட் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர் தங்கப் பதக்கம் பெற்றதிலிருந்து மொத்த சமூக ஊடக தொடர்புகள் 12.79 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது 86.3 சதவிகிதம் அதிகரிக்கும் விகிதத்தில் உள்ளது.இது சமூக ஊடகங்களில் உள்ள இந்திய விளையாட்டு வீரர்களை பின்தொடர்பவர்களின் சராசரி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என்று பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் போன்ற சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களை விட அவர் முன்னிலையில் உள்ளார்.
இந்த அளவிற்கு புகழ் அதிகரித்ததால், நீரஜ் சோப்ராவை சமூக ஊடக தளங்களில்,குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனாக உள்ளது.அறிக்கையின்படி அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் 2,297 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து,சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது மட்டுமல்லாமல், பல பிராண்டுகள் மற்றும் வணிகங்களின் இலக்காகவும் அவருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…