ஒலிம்பிக் வில்வித்தை:உலகின் நம்பர் 1 வீரரிடம் போராடி தோற்ற பிரவீன் ஜாதவ்..!
ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் காலிறுதியின் முந்தைய சுற்றில்,உலகின் நம்பர் 1 பிராடி எலிசனிடம் போராடி தோல்வியுற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் இந்தியாவின் பிரவீன் ஜாதவ்,ரஷ்யாவை சேர்ந்த உலகின் நம்பர் 2 வீரர் கல்சன் பஜார்ஜபோவை இன்று காலை எதிர்கொண்டார்.
முன்னிலை:
போட்டியின் தொடக்கம் முதலே பிரவீன் ஆதிக்கம் செலுத்தினார். அதன்படி,முதல் செட்டை 29-27 (10-9,9-9,10-9) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.
இதனையடுத்து,இரண்டாவது செட்டை 28-27 (9 -10,9-10,10-7) என்ற கணக்கில் பெற்று பிரவீன் முன்னிலை வகித்தார்.இதனைத் தொடர்ந்து,பிரவீன் ஜாதவ் தனது தனிப்பட்ட திறமையால் மூன்றாவது செட்டையும் 28-24 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை கைப்பற்றினார்.
முன்னேற்றம்:
இதனால்,பிரவீன் 6-0 என்ற கணக்கில் ரஷ்யாவை சேர்ந்த கல்சன் பஜார்ஜபோவை வென்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கனவு:
இந்நிலையில்,அதன்பின்னர் நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை ஆண்கள் தனிநபர் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் பிரவீன் ஜாதவ் ,உலகின் நம்பர் 1 வில்வித்தை வீரரான அமெரிக்காவின் பிராடி எலிசனை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் 9-9, 10-8, 8-8 என்ற கணக்கிலும்,இரண்டாவது செட்டை 8-10, 9-10, 8-7 என்ற கணக்கிலும்,மூன்றாவது செட்டை 10-9,7-9,7-9 என்ற கணக்கிலும் பெற்றதால்,இறுதியில் 0 – 6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியுற்றார்.இதனால்,காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததனால், ஆண்கள் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு கனவாகிப் போனது.
#TeamIndia | #Tokyo2020 | #Archery
Men’s Individual 1/16 Eliminations ResultsAfter earlier knocking out World No. 2, archer @pravinarcher goes down against World No. 1 Brady Ellison 0-6. Spirited effort champ! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/m5DdlGJHAR
— Team India (@WeAreTeamIndia) July 28, 2021