ஒலிம்பிக் வில்வித்தை – காலிறுதியில் தீபிகா குமாரி போராடி தோல்வி..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியின்,காலிறுதி சுற்றில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியுற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார்.

முதல் செட்:

இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை பெரோவா திறமையை வெளிப்படுத்தினார்.இருப்பினும், முதல் செட்டை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா முன்னிலை வகித்தார்.

விறுவிறுப்பான போட்டி:

பின்னர்,இரண்டாவது செட்டை 26-27 என்ற புள்ளி கணக்கில் ரஷ்யாவின் பெரோவா கைப்பற்றினார்.ஆனால்,மூன்றாவது செட்டை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது செட்டில் 26-26 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.

இதனால்,வெற்றியை கடைபிடிக்க சூட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்,பெரோவா 7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். ஆனால்,தீபிகா 10 புள்ளிகள் பெற்றார்.இதனால் 6-5 என்ற கணக்கில் பெரோவாவை வீழ்த்தி, தீபிகா வெற்றி பெற்றார்.இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதி :

இந்நிலையில்,காலிறுதி சுற்றில் தீபிகா குமாரி,தென் கொரியாவின் ஆன் சானை எதிர்கொண்டார்.

பின்னடைவு:

முதல் செட்டில் ஆன் சான் 30-27 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.இதனையடுத்து ,இரண்டாவது செட்டிலும்,தீபிகாவை வீழ்த்தி ஆன் 26-24 முன்னிலையில் இருந்தார்,கடைசியில் மூன்றாவது செட்டிலும் 26-24 என்ற கணக்கில் தென்கொரிய வீராங்கனை முன்னிலை பெற்றார்.

வாய்ப்பை இழந்தார்:

இறுதியாக,தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கில் ஆன் சானிடம் தோல்வியுற்றார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் பதக்க வாய்ப்பை இழந்தார்.இருப்பினும்,ஒவ்வொரு  செட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே புள்ளிகளை இழந்து போராடி தோல்வியடைந்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

6 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

7 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

8 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

9 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

9 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

10 hours ago