டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை தனிநபர் பிரிவு போட்டியில் தென்கொரியா வீரர் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி,இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில்,ஜூலை 28 ம் தேதி நடைபெற்ற வில்வித்தை பெண்கள் தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிக்கு தகுதி பெற்றார்.
தொடர் வெற்றி:
இந்நிலையில்,அவரது கணவரான அதானு தாஸ் இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை,அதானு தாஸ் எதிர்கொண்டார்.
ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை:
இதில்,ஓ ஜின்-ஹைக் மற்றும் அதானு ஆகியோருக்கு இடையிலான ஆட்டம் ஐந்தாவது செட் முடிந்ததும் தலா 5 செட் புள்ளிகளில் சமநிலையில் இருந்தது. இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது.இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் மட்டுமே பெற்றார்.
இதனால் 6-5 என்ற செட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று, ஜூலை 31 ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.இப்போட்டியில் ஜப்பானின் தகாஹரு ஃபுருகாவாவை எதிர்கொள்வார்.
தகாஹரு ஃபுருகாவா:
இவர் வில்வித்தை போட்டியில் உலகில் 37 வது இடத்தில் உள்ளார்.லண்டன் ஒலிம்பிக்கில் தகாஹரு ஃபுருகாவா தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.மேலும்,2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு அணி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அதானு தாஸ்:
அதேபோல,அதானு தாஸ் உலக தரவரிசையில் 22 வது இடத்தில் உள்ளார்.கொலம்பியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட 2013 உலகக் கோப்பை கலப்பு அணி நிகழ்வில் தனது மனைவி தீபிகா குமாரியுடன் இணைந்து அதானு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும்,தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் முன்னதாக நெதர்லாந்தின் ஸ்ஜெஃப் வான் டென் பெர்க் மற்றும் கேப்ரியலா ஸ்க்லோசர் ஆகியோரை வீழ்த்தி போட்டியில் இருந்து இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்.
2021 வில்வித்தை உலகக் கோப்பை போட்டியின் தனிநபர் பிரிவில் அதானு தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…