#NZvIND: போட்டியை மாற்றிய இறுதி நான்கு விக்கெட்..!
- இன்று நடைபெற்ற நான்காம் டி-20 போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்று,
- மேலும், இந்த போட்டியில் இறுதி ஓவரில் ஷர்துல் தாகூரின் வெறித்தனமான பந்துவீச்சால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்றாம் டி-20 போட்டி போலவே, இன்று நடைபெற்ற நான்காம் போட்டியும் நியூஸிலாந்து அணிக்கு சாதமாக சென்று, இறுதியில் சூப்பர் ஓவருக்கு சென்றது. இது, ரசிகர்களிடையே போட்டியின் ஆர்வத்தை கூட்டியது.
மேலும், இந்திய அணி, முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தற்பொழுது நடந்த நான்காம் போட்டியிலும் வெற்றி பெற்றதால், 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன்-K.L.ராகுல் களமிறங்கினர்.
8 ரன்களில் சஞ்சு சாம்சன் வெளியேற, அவரை அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 11 ரன்களில் வெளியேறினார். 39 ரன்களில் K.L.ராகுல் வெளியேற, அவரை அடுத்து மனிஷ் பண்டே, 50 ரன்களில் வெளியேறினார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரரான குப்தில், 4 ரன்களில் வெளியேற, மூன்றோ-சைபெட் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாண்டு ஸ்கோரை உயர்த்தினார்கள். 64 ரன்களில் மூன்றோ வெளியேறினார். இறுதியாக, நியூஸிலாந்து அணிக்கு 6 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுக்கவேண்டியது. களத்தில் அதிரடி வீரர்களான ரோஸ் டெய்லர் மற்றும் சைபெட் இருந்தனர். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் பந்துவீச வந்தார்.
இவரின் முதல் பந்தில், ரோஸ் டெய்லரின் விக்கெட்டை எடுத்தார். அவரின் விக்கெட்டை வீழ்த்தியஉடனே, சூப்பர் ஓவருக்கு வாய்ப்புள்ளது என ரசிகர்கள் மத்தியில் தோன்றியது. ஆனால், அடுத்த பந்திலேயே மிட்செல் பவுண்டரி அடித்தார். இதன்மூலம் 4 பந்துகளில் 3 ரன் எடுத்தால் வெற்றி என இலக்குடன் இருந்தது. மூன்றாம் பந்தில் சைபேர்ட் ஆட்டமிழக்க, நான்காம் பந்தில் 1 ரன் அடித்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி. பரபரப்பாக இருந்த ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஓவர் வருமோ என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி பந்து வீசப்பட்ட நிலையில், இரண்டாம் ரன் எடுக்க சண்ட்னர் முயற்சித்த பொது அவர் ரன்-அவுட் ஆனார்.
இறுதியாக, நியூஸிலாந்து அணி 165 ரன்கள் எடுக்க, போட்டி சமனில் முடிந்து ரசிகர்கள் எதிர்பார்த்த சூப்பர் ஓவர் நடந்தது. இதில் நியூஸிலாந்து அணியின் மூன்றோ-சைபெட் களமிறங்கினர். பும்ரா பந்துவீச, 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் கோலி-ராகுல் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாம் பந்தில் பௌண்டரி அடித்து அசத்தினார். மூன்றாம் பந்தில் அவர் வெளியேற, நான்காம் பந்தில் கோலி 2 ரன்கள் எடுத்தார். இறுதியில், கோலி பவுண்டரி விளாச, இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாகூருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.