அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷ்ய வீரரிடம் தோல்வியடைந்துள்ளார்.
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ரஷ்யாவின் டேனியல் மெட்வெதேவுடன் மோதி உள்ளார். இந்தப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் வரலாற்று சாதனை படைப்பார் என அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். போட்டி தொடங்கியது முதலே ரஷ்ய வீரர் நோவாக்குக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதனால் நோவாக் முதல் செட்டிலேயே 6-4 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்துள்ளார். அதன் பின் 2-வது செட்டில் பதற்றத்துடன் விளையாடிய நோவாக் அதனையும் இழந்துள்ளார். இரண்டு ஆட்டத்திலும் தோல்வியடைந்ததால், நோவாக் மைதானத்தில் வைத்தே தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்துள்ளார். இந்த செயல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விளையாடிய நோவாக் ஜோகோவிச் இந்த போட்டியில் முழுவதுமாக ரஷ்ய வீரரிடம் தோல்வியை கண்டுள்ளார்.
இந்த போட்டியில் 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் இவர் தோல்வியடைந்துள்ளார். உலகின் நம்பர் 1 வீரர் எனப் போற்றப்படும் நோவாக் இந்த போட்டியில் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஓபனையும் கைப்பற்றி, ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றியவர் என்ற சாதனை படைப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அரிய சாதனை அவரது கையிலிருந்து நழுவி போய்விட்டது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…