கொரோனா தடுப்பூசியால் கிராண்ட்ஸ்லாம் வாய்ப்புகளை இழந்த நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஜோகோவிச்சுக்கு, அமெரிக்காவிலும் நுழைவு மறுக்கப்பட்டது, அதனால் அவர் நியூயார்க்கில் நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஜோகோவிச் லண்டனில் போட்டியிட அனுமதிக்கப்பட்டது மேலும் அவர் 2022 இல் லண்டனில் நடந்த விம்பிள்டன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனது குறித்து வருத்தம் இல்லை என்றும் ,அது நான் எடுத்த முடிவு அதன் விளைவுகள் எனக்குத் தெரியும். அதனால் நான் ஏற்றுக்கொண்டேன், அவ்வளவுதான்” என்று ஜோகோவிச் கூறினார். 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபன் தொடரை நோக்கி ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.