நான் விரும்பிய பேட்டிங் போது இறந்தால் அதைவிட பாக்கியம் வேறு ஒன்றுமில்லை.! விவ் ரிச்சர்ட்ஸ்.!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் விவ் ரிச்சர்ட்ஸ். இவரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் தி கிரேட் ரிச்சர்ட்ஸ் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
இவருடைய சிறப்பே வேகப் பந்துவீச்சு போது ஹெல்மெட் அணியாமல் விளையாடுவதுதான். பலர் அறிவுறுத்தியும் இவர் அந்த காலகட்டத்திலேயே ஹெல்மெட் அணியாமல் விளையாடி உள்ளார். இந்நிலையில் தான் ஹெல்மெட் ஏன் அணியவில்லை.? என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவிடம் ஒரு கலந்துரையாடலின் போது அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் , பேஷனாக பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் அந்த அளவிற்கு நான் ஈடுபாடு கொண்டிருந்தேன் நான் விரும்பும் பேட்டிங்கை விளையாடும்போது இறந்தால் கூட பரவாயில்லை அப்படி நான் விரும்பிய பேட்டிங் போது இறந்தால் அதைவிட பாக்கியம் வேறு ஒன்றுமில்லை என கூறினார்.
நான் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களையும் பார்ப்பேன்.ஒரு கார் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை விட பெரிய ஆபத்து வேறு என்ன இருக்கிறது என தெரிவித்தார். இவருக்கு வயது 68 சர்வதேச அளவில் 121 டெஸ்ட் போட்டியிலும் , 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 291 ரன்னும் ,ஒருநாள் போட்டியில் 189 ரன்னும் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும்.