‘போராட மனதில் உறுதியில்லை’! ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் .!!
பாரிஸ் : பாரிஸில் ஒலிம்பிக் 33=வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நாள் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாகவே மாறி உள்ளது என கூறலாம். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வதை கனவாக வைத்து பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
அதே போல ஒலிம்பிக் தொடரில் நடத்த படும் மகளீருக்கான 50கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்து, நேற்றைய நாள் 100 கிராம் அதிகம் இருப்பதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது நேற்றைய பெரும் சர்ச்சையாக வெடித்தது, வினேஷ் போகத்திற்க்காக பல நடிகைகள், விளையாட்டு துறை சார்ந்தவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், அவர் அன்று இரவு முழுவதும் எடையை குறைப்பதற்காக மேற்கொண்ட பயிற்சியில் நீர்சத்து குறைப்பாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை அவர் மல்யுத்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக வருத்தம் நிறைந்த ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவில், “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் தோற்று விட்டேன். உங்கள் கனவு, எனது தைரியம் எல்லாம் உடைந்து விட்டது. எனக்கு போராட மனதில் உறுதியில்லை.
மல்யுத்தத்துக்கு (2001-2024) குட்பை. அனைவரும் என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவுக்காக மல்யுத்த போட்டியில் களம் கண்ட வினேஷ் போகத் தொடர்ந்து இந்தியாவுக்காக பல சாதனைகளை நிகழ்த்தினார்.
மேலும் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கிலும் பல வெற்றிகளை கண்டு, தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வினேஷ் போகத்தின் ஓய்வு முடிவு இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
माँ कुश्ती मेरे से जीत गई मैं हार गई माफ़ करना आपका सपना मेरी हिम्मत सब टूट चुके इससे ज़्यादा ताक़त नहीं रही अब।
अलविदा कुश्ती 2001-2024 🙏
आप सबकी हमेशा ऋणी रहूँगी माफी 🙏🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) August 7, 2024