நார்வே செஸ்: நடைபெற்று வந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று அந்த தொடரை கைப்பற்றி உள்ளார். மேலும், அவருடன் விளையாடிய அமெரிக்கா நாட்டின் ஹிக்காரு நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அது சற்று கைநழுவி போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதாவது நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா, நகமுராவை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா முதல் சுற்றான கிளாசிக்கல் முறையில் வெற்றி பெற்று, மறுமுனையில் மேக்னஸ் கார்ல்சன், பாபியானோவுடன் தோல்வி அடைந்திருந்தால் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்திருக்கலாம். ஆனால், கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்றார். இதனால் 2-வது இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தது.
அதுவும் பிரக்ஞானந்தா கிளாசிக்கல் முறையில் நகமுராவை வீழ்த்தினாலே கைவசம் ஆகும். ஆனால், க்ளாசிக்கல் போட்டியானது ட்ரா ஆனது. இதனால் அடுத்த சுற்றன அர்மகெதோன் (Armageddon) சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால்1 புள்ளிகள் வித்தியாசத்தில் 3-ம் இடம் பிடித்தார்.
ஒரு வேலை அதில் தோல்வியடைந்திருந்தால் 4-ஆம் இடம் பிடித்திருப்பார். இதனால் அவரது ரசிகர்கள் நூலிழையில் வாய்ப்பு போய்விட்டது என கவலையில் இருந்தாலும் நார்வே செஸ் தொடரில் 3-ம் பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த தொடரை வென்ற மேக்னஸ் கார்ல்சனுக்கு 700,000 நார்வே குரோன் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நகமுராவிற்கு 350,000 நார்வே குரோனும், 3-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு 200,000 நார்வே குரோனும் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…