நார்வே செஸ்: வெற்றி பெற்றும் 3-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா! கவலையில் ரசிகர்கள்!

நார்வே செஸ்: நடைபெற்று வந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று அந்த தொடரை கைப்பற்றி உள்ளார். மேலும், அவருடன் விளையாடிய அமெரிக்கா நாட்டின் ஹிக்காரு நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அது சற்று கைநழுவி போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதாவது நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா, நகமுராவை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் பிரக்ஞானந்தா முதல் சுற்றான கிளாசிக்கல் முறையில் வெற்றி பெற்று, மறுமுனையில் மேக்னஸ் கார்ல்சன், பாபியானோவுடன் தோல்வி அடைந்திருந்தால் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்திருக்கலாம். ஆனால், கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்றார். இதனால் 2-வது இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தது.
அதுவும் பிரக்ஞானந்தா கிளாசிக்கல் முறையில் நகமுராவை வீழ்த்தினாலே கைவசம் ஆகும். ஆனால், க்ளாசிக்கல் போட்டியானது ட்ரா ஆனது. இதனால் அடுத்த சுற்றன அர்மகெதோன் (Armageddon) சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால்1 புள்ளிகள் வித்தியாசத்தில் 3-ம் இடம் பிடித்தார்.
ஒரு வேலை அதில் தோல்வியடைந்திருந்தால் 4-ஆம் இடம் பிடித்திருப்பார். இதனால் அவரது ரசிகர்கள் நூலிழையில் வாய்ப்பு போய்விட்டது என கவலையில் இருந்தாலும் நார்வே செஸ் தொடரில் 3-ம் பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்த தொடரை வென்ற மேக்னஸ் கார்ல்சனுக்கு 700,000 நார்வே குரோன் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நகமுராவிற்கு 350,000 நார்வே குரோனும், 3-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு 200,000 நார்வே குரோனும் பரிசாக வழங்கப்பட்டது.