நான் ஒரு இஸ்லாமியனாகவும் பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார்.
அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கு வகையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பேசியுள்ளார். அதன்படி, முகமது ஷமி கூறியதாவது, நான் பிராத்தனைசெய்ய விரும்பினால் என்னை யாரும் தடுக்க முடியாது. இதுபோன்று, நானும் யாருடைய பிராத்தனையும் தடுக்க மாட்டேன். நான் பிராத்தனை செய்ய விரும்பினால் நிச்சயம் செய்வேன். இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இந்திய அணியில் என்ன நடக்குதுன்னு தெரியல.. ஆஸ்திரேலியாவுக்கு இதுதான் பலம் – கவுதம் கம்பீர்
நான் ஒரு இஸ்லாமியன் என்பதை பெருமையுடன் சொல்வேன். அதேபோல் நான் ஒரு இந்தியன் என்பதையும் பெருமையுடன் சொல்வேன். அதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளார். பிராத்தனை செய்ய நான் யாரிடமாவது அனுமதி கேட்க வேண்டும் என்றால், ஏன் இந்த நாட்டில் நான் இருக்க வேண்டும் எனவும் கூறிய அவர், இதுதொடர்பான சிலரின் பதிவுகளை சமூக வலைதளங்களில் நானும் பார்த்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதற்கு முன் மைதானத்தில் நான் பிரார்த்தனையில் ஈடுபட்டு பார்த்திருக்கிறீர்களா?, அந்த போட்டிக்கு முன்பும் நானும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளே, அப்போது கூட நான் மைதானத்தில் பிரார்த்தனை செய்யவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியின்போது, நான் சோர்வாக இருந்ததால், மைதானத்திலேயே முட்டியிட்டு அமர்ந்தேன். அதை சிலர் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…