மூத்தவர்கள், இளையவர்களை மதிக்க வேண்டும் மேரிகோமை சாடிய நிஹாத் ஜரீன்

Default Image
  • நேற்று மேரிகோம் வெற்றி பெற்ற தன் மூலம் 2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார்.
  •  போட்டிக்கு பின் பேசிய நிஹாத் ஜரீன் குத்துச்சண்டை போட்டிக்குப் பின் நான் கைகுலுக்க வந்த போது மேரிகோம் கைகுலுக்கவில்லை என கூறினார்.

சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக  இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெற்றது.

இதில் 51 கிலோ உடல் எடைப் பிரிவில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஜூனியர் உலக சாம்பியனான  நிகாத் ஜரீன், தேசிய சாம்பியன் ஜோதி குலியாவை வீழ்த்தி நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி நிகாத் ஜரீன் வெற்றி பெற்றார்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம் , ரிது கிரிவாலை வீழ்த்தினார். நேற்று 36 வயதான மேரிகோம் , 23 வயதான நிகாத் ஜரீன்  இருவரும் மோதினர். இந்த போட்டியில் மேரிகோம் 9-1 என்ற புள்ளி கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நிஹாத் ஜரீன் கூறுகையில் , குத்துச்சண்டை போட்டிக்குப் பின் நான் கைகுலுக்க வந்த போது மேரிகோம் கைகுலுக்கவில்லை; மேரிகோம் அவ்வாறு நடந்து கொண்டது எனக்கு வேதனை அளித்தது.மூத்தவர்கள், இளையவர்களை மதிக்க வேண்டும் என குத்துச்சண்டை வீராங்கனை  கூறினார்.

இப்போட்டியில் மேரிகோம்வெற்றி பெற்றதன் மூலம் 2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரிகோம் தகுதி பெற்று உள்ளார்.

மேரிகோமை நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு செய்யக்கூடாது. அவரை என்னுடன் மோத வைக்க வேண்டும் என நிகாத் ஜரீன் வலியுறுத்தி இருந்த நிலையில் நேற்று இருவருக்கும் போட்டி நடைபெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்