Tokyo Olympics:ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நைஜீரிய ஸ்ப்ரிண்டர் ஒகாக்பரே- க்கு ஒலிம்பிக்கில் தடை
2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரிய ஸ்ப்ரிண்டர் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம்.
டோக்கியோ: நைஜீரிய ஸ்ப்ரிண்டர் மற்றும் 2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிளெஸ்ஸிங் ஒகாக்பரே ஊக்கமருந்து மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.
32 வயதான இவர், 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று தனது நான்காவது ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார், சனிக்கிழமை அரையிறுதிக்கு தகுதிபெற்று தனது 100 மீ ஓட்டப்பந்தையத்தில் 11.05 வினாடிகளில் வென்றார்.இதனைத்தொடர்ந்து அவர் 200 மீ மற்றும் 4X100 மீ ரிலே ஆகியவற்றில் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் ,ஜூலை 19 அன்று நடந்த போட்டிக்கு வெளியே நடந்த சோதனையில் அவர் நேர்மறையான முடிவு வந்துள்ளதால் , சனிக்கிழமையன்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக என்று தடகள ஒருமைப்பாடு அமைப்பு ( AIU) தெரிவித்துள்ளது.