Brazil vs Peru: ஹாட்ரிக் கோல்களை அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்த நெய்மர்!

Default Image

நேற்று நடைபெற்ற பிரேசில் – பெரூ இடையிலான போட்டியில் நெய்மர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்ததன் மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிரேசில் – பெரூ அணிகள் மோதியது. கொலம்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய முதல் 6 ஆம் நிமிடத்தில் பெரூ அணியின் ஆந்த்ரே கரிலோ, முதல் கோலை அடித்தார்.

அதனைதொடர்ந்து 28 ஆம் நிமிடத்தில் பெரூ வீரர் ஒருவர், பெனால்டி பகுதிக்குள் பந்தை அடித்ததால், பெனால்டி கிக் வழங்கப்பட்டது. அதனை பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், கோலாக மாற்றி சமன் செய்தார். போட்டியின் 59 ஆம் நிமிடத்தில் பெரூ வீரர் ரெனாட்டோ டபியாஸ், 25 மீட்டர் தூரத்திலிருந்து கோல் அடிக்க, 2-1 என்ற கணக்கில் பெரூ அணி முன்னிலை அடைந்தது.

இது, நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த 5 ஆம் நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிகார்லிசன் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் சமமான இருந்தது. போட்டி முடிய 7 நிமிடங்களே உள்ள நிலையில், பிரேசில் அணி தோவியை சந்திக்கவுள்ளதாக ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அப்படி நினைக்கவில்லை. அப்பொழுது நெய்மர் மற்றொரு கோல் அடிக்க, அதனைதொடர்ந்து அதிரடியாக மற்றொரு கோல் அடித்து, தனது 64வது கோலை அடித்தார்.

இதன்மூலம் பிரேசில் அணி, 4-2 என்ற கோல்கள் கணக்கில் பெரூ அணியை வீழ்த்தியது. இதில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து நெய்மர் சாதனை புரிந்தார். அதுமட்டுமின்றி, ரொனால்டோவின் சாதனையும் முறியடித்துள்ளார். 103 போட்டிகளில் 64 கோல்கள் அடித்து இராண்டாம் இடத்தில் உள்ளார், நெய்மர். அதற்கு முன், 77 கோல்கள் அடித்து அதிரடி வீரர் பிலே உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்