அடுத்த டார்கெட் கோப்பா அமெரிக்கா தான் !! மெஸ்ஸி ரசிகர்களுக்கு குட் நியூஸ் ..!

Lionel Messi

சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி விளையாடுவர் என தெரியவந்துள்ளது.

அர்ஜன்டினா கால்பந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மெஸ்ஸி தற்போது வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்க்கு முன்னர் அர்ஜென்டினா அணியில் சில நட்புரீதியான போட்டிகளையும் விளையாடுவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கோப்பையையும், அதன் பிறகு தொடர்ந்து அடுத்த வருடத்தில், 2022ல் நடைபெற்ற கால்பந்து உலககோப்பையையும் ஒரு கேப்டனாக மெஸ்ஸி கைப்பற்றி இருக்கிறார். மேலும், இதுவரை சர்வதேச கோப்பைகள் மற்றும் உள்ளூர் கோப்பைகள் என மொத்தம் 34 கோப்பைகளை ஒரு கேப்டனாக வென்றிருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் அவர் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தார். அதனை தொடர்ந்து நிறைய நட்புரீதியான போட்டிகளில் விளையாடி வந்த இவர் தற்போது வரக்கூடிய கோப்பா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினா  அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும், வருகிற ஜூன் 9 மற்றும் ஜூன் 14ம் தேதி அன்று அர்ஜென்டினா அணி சிகாகோ மற்றும் வாஷிங்டன் அணியுடன் நட்புரீதியான போட்டியில் விளையாடவுள்ளது. அந்த போட்டிகளில் மெஸ்ஸி விளையாடுவர், அதனை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி தொடங்கும் கோப்பா அமெரிக்கா தொடரிலும் விளையாடுவார். அவரை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் இந்த நட்புரீதியான போட்டிகளில் விளையாடுவர் என்று தெரிந்ததும் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து ஒரு கேப்டனாக அவரது அடுத்த டார்கட் கோப்பா அமெரிக்கா கோப்பை தான் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றார்.  இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் மினி உலகக்கோப்பையான கோப்பா அமெரிக்கா தொடரின் முதல் போட்டியில் அர்ஜன்டினா அணி கனடாவை எதிர்த்து விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்