IND vs NZ : இந்திய அணியை புரட்டி எடுக்கும் நியூஸிலாந்து! 2-ஆம் நாள் ஆட்டச் சுருக்கம்.. இதோ!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் 198/5 ரன்கள் குவித்துள்ளது.
புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்த நியூஸிலாந்துஅணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பான பேட்டிங் செய்து ரன்களை சேர்த்து.
அதாவது, 79.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 259சேர்த்தது. அதிகபட்சமாக கான்வே 76, ரச்சின் ரவீந்திரன் 65, சான்ட்னர் 33 ரன்கள் எடுத்து இருந்தார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்கள்.
நியூசிலாந்து அணி இன்னிங்ஸில் 259 ரன்கள் குவித்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய, முதல் பேட்டிங் இன்னிங்ஸை தொடங்கியது ஆரம்பத்திலிருந்தே தடுமாறி விளையாடி விக்கெட்களை கொடுத்து வந்தது. மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு வெறும் 156 ரன்களுக்கே சுருண்டது.
இதனால், 103 ரன்கள் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்துஅணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டாம் நாளான, இன்று தொடங்கியது. தொடக்கத்தில் விக்கெட்களை விட்டாலும் நிதானமாக விளையாடி நியூஸிலாந்துஅணி ரன்களை குவித்தது. அதற்கு முக்கியமான காரணமே அணியின் கேப்டன் டாம் லாதம் தான்.
ஏனென்றால், டெவோன் கான்வே 17, வில் யங் 23 ஆகியோர் ஆட்டமிழந்தபோதும் கேப்டன் டாம் லாதம் நிதானமாக விளையாடி 86 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்ததாக டாம் ப்ளண்டெல் அதேபோல் நிதானமாக விளையாடி வருகிறார். இந்த சூழலில், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. இரண்டாம் நாள் முடிவில் 53 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் டாம் ப்ளன்டெல் 30 *, க்ளென் பிலிப்ஸ் 9*ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். நாளை மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.