இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 278 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இந்திய திணறி வருகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது இறுதியாக இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து. நியூசிலாந்து அணி சார்பாக மார்ட்டின் குப்டில் 79 ரன்களும், ரோஸ் டெய்லர் 73 ரன்களுடன் அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி பிருத்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் இருவரும் 23, 3 என்ற சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கோலி 15 ரன்களில் சவுத்தி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 28 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்துல் தாக்கூர் தற்போது விளையாடி வருகிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…