குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்! சென்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் எமோஷனல்!

daryl mitchell family

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட வீரர்களை தேர்வு செய்து ஏலத்தில் எடுப்பது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பல முக்கியமான வீரர்களை தங்களுடைய அணிக்கு அதிக விலைகொடுத்து வாங்கியது. அந்த வகையில் சென்னை அணி நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் – ஐ 14 கோடிக்கு வாங்கியது. சென்னை அணி தன்னை ஏலத்தில் எடுத்தது குறித்து டேரில் மிட்செல் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” ஐபிஎல் ஏலம் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் தான் என்னுடைய மூத்த மகளின் 5-வது பிறந்த நாள். அவருடைய பிறந்த நாளின் போது என்னை சென்னை அணி இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்துள்ளது. இதனை என்னுடைய மகளின் பிறந்த நாள் பரிசாக அளிக்கிறேன். எவ்வளவு பெரிய தொகைக்கு நான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளேன் என்று என்னுடைய மகளுக்கு சத்தியமாக தெரியாது.

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்! 

ஆனால், சென்னை அணி என்னை இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்துள்ளது எங்கு பெரிய உதவியாக இருக்கும். என்னுடைய குடும்பத்திற்கு இந்த தொகை உதவும். இந்த தொகை மூலம் என்னுடைய குழந்தைகள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு பல விஷயங்களை இந்த தொகையை வைத்து அனுபவிக்க முடியும். என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எனக்காக அளித்த இந்த வாய்ப்பை நான் மிகவும் அதிர்ஷ்ட்டமாக பார்க்கிறேன். சென்னை அணிக்கு எப்போது விளையாடலாம் என்றும் ஆவலுடன் காத்து இருக்கிறேன்” எனவும் டேரில் மிட்செல் சற்று உருக்கமாக பேசியுள்ளார். மேலும் டேரில் மிட்செல் இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு (2024)ல் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்