புதிய சாதனை…மரடோனாவின் ‘ஹேண்ட் ஆஃப் காட்’ ஜெர்சி – இத்தனை கோடிக்கு ஏலமா?..!

Default Image

மிகவும் புகழ்பெற்ற அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா,1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டு முறை கோல் அடித்தபோது அணிந்திருந்த ஜெர்சி,நேற்று 9.3 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.இது விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான ஏலத்தில் இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும் என்று ஏல நிறுவனமான சோதேபிஸ் தெரிவித்துள்ளது.ஏனெனில்,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மரடோனா அடித்த கோல் கால்பந்து வரலாற்றில் இன்று வரை மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும்,இது தொடர்பாக,தெரு உடைகள் மற்றும் நவீன சேகரிப்புகளின் நிறுவனமான சோதேபிஸ் தலைவர் கூறுகையில் “இந்த வரலாற்றுச் ஜெர்சி விளையாட்டு வரலாற்றில் மட்டுமல்ல,20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றிலும் ஒரு முக்கியமான தருணத்தை நினைவூட்டுவதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

“The man with Maradona’s shirt” என்று தலைப்பிடப்பட்ட இந்த ஜெர்சி, கடந்த 20 ஆண்டுகளாக மான்செஸ்டரில் உள்ள தேசிய கால்பந்து அருங்காட்சியகத்தில் பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில்,தற்போது அதிக தொகைக்கு ஏலம் போனது.ஆனால்,ஜெர்சியை வாங்கியவரின் விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக,1892 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மேனிஃபெஸ்டோவின் ஆட்டோகிராப் கையெழுத்துப் பிரதியே விளையாட்டு நினைவுச் சின்னங்களுக்கான ஏலத்தில் கடந்த 2019 டிசம்பரில் சோதேபிஸ்-இல் 8.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

இதற்கிடையில்,கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி தனது 60 வயதில் மரடோனா உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson