இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரெவெர் பேலிஸின் இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்ததால் புதிய பயிற்சியாளரை தேடும் தீவிர பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருந்தது.
இவர் பயிற்சியாளராக இருந்தபோது இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் இந்தாண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 2-2 என கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இவரை போன்று அணி வழிநடத்த ஒரு புதிய பயிற்சியாளரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடியது. அப்போது கேரி கிறிஸ்டன், அலெக் ஸ்டீவார்ட், சில்வர்வுட் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.இதனால் இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் வருவார் என தகவல் வெளியானது.
கேரி கிறிஸ்டன் இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது தலைமை பயிற்சியாளராக இருந்தார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேர்காணலில் கிறிஸ் சில்வர்வுட் சிறப்பாக செயல்பட்டதால் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கிறிஸ் சில்வர்வுட் 2017-18 ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…