புதிய சாதனை..! ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் தீபக் சாஹர்..!
நேற்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்து உள்ளார். பங்களாதேஷ் அணியின் ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோரை விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி 20 ஐ போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் சாஹர் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் தீபக் சாஹர் 3.2 ஓவர் வீசி 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினர். இதற்கு முன் இந்த சாதனையை இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் செய்து இருந்தார். அவர் 4 ஓவர் வீசி அதில் 2 ஓவரை மெய்டன் செய்து 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.