சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் புதிய சாதனை;ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!

ஆசிய தகுதிச் சுற்று படகுப் போட்டி வெற்றி பெற்றதன் மூலமாக, டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் நேத்ரா குமணன்.
சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டவராக இருந்தார், நேத்ரா 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துக்கொண்டார். 2014இல் தென்கொரியாவின் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு வெறும் 16 வயதே ஆகியிருந்தது.
ஓமனில் நடைப்பெற்ற ஆசிய படகுப் போட்டி தகுதி சுற்றின் ரேடியல் பிரிவில் வென்று ,நேத்ரா குமணன் 21 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். இதனால் தரவரிசையில் முன்னிலை பெற்று, ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.23 வயதான நேத்ராதான் இந்தியா சார்பாக படகுப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் முதல் பெண் வீராங்கனை.இதற்கு முன் இந்தியா சார்பாக படகுப் போட்டிக்கு 9 ஆண் துடுப்பு வீரர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025