உசைன் போல்ட்டை பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா சாதனை.!
2022ஆம் ஆண்டில் அதிகமுறை கட்டுரைகளில் எழுதப்பட்டு நீரஜ் சோப்ரா, உசைன் போல்ட்டை முந்தியுள்ளார்.
இந்திய ஈட்டி எரியும் வீரரான நீரஜ் சோப்ரா, 2022 ஆம் ஆண்டில் அதிகம் உச்சரிக்கப்பட்ட தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளார், அன்று தொடர்ந்து நீரஜ் சோப்ரா இந்தியாவின் முக்கிய தடகள வீரராகக் கருதப்படுகிறார்.
2022 ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா குறித்து அதிகபட்சமாக 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்று உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார். அவரைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர்களான எலைன் தாம்சன்-ஹேரா (751), ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-ப்ரைஸ் (698) மற்றும் ஷெரிக்கா ஜாக்சன் (679) கட்டுரைகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
உசைன் போல்ட் இந்த ஆண்டு 574 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளார். போல்ட் 2017 இல் ஓய்வு பெற்ற போதிலும், 100 மீ மற்றும் 200 மீ ஓட்டங்களில் சாதனை படைத்தவராக இருக்கிறார். ஆனால் 2022 ஆம் ஆண்டு நீரஜ் சோப்ராவுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருந்திருக்கிறது.
நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டு ஓரிகானின் யூஜினில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ஈட்டி எறிதலில் வென்ற இந்தியாவின் முதல் தடகள வீரராக சோப்ரா மற்றொரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளார்.