NBA draft 2020: NBA என்றால் என்ன? வெற்றி, ஸ்டில் மற்றும் ரீச் பட்டியல் இதோ!

Default Image

நடப்பாண்டு NBA தொடரில் வெற்றி, ஸ்டில் மற்றும் ரீச் பட்டியலை காணலாம்.

NBA:

NBA என்பது, National Basketball Association. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல உலகளவில் இந்த பேஸ்கட்பால் தொடர் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த தொடர், 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. 1946 முதல் 2020 வரை உலகளவில் இதுவே பெரிய பேஸ்கட்பால் தொடராகும். Western Conference, Eastern Conference பகுதிகளில் உள்ள அணிகள் பங்கேற்கும். Western Conference-ல் 15 அணிகளும், Eastern Conference-ல் 15 அணிகள் என மொத்தம் 30 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும். இந்தாண்டு கோப்பையை Lakers அணி தட்டிச்சென்றது. அதுமட்டுமின்றி, NBA-க்கு நிகராக இதுவரை எந்தவொரு பேஸ்கட்பால் தொடர் நெருங்கவில்லை என கூறப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியாளர் – டெனி அவ்டிஜா (19 வயது):

இந்த தொடரில் மிகப்பெரிய வெற்றியாளராக இஸ்ரேலைச் சேர்ந்த 19 வயதான வாஷிங்டன் விசார்ட்ஸ் அணியை சேர்ந்த டெனி அவ்டிஜா வீரர் அறிவிக்கப்பட்டார். அவ்டிஜா, அனைவரையும் ஈர்க்கக்கூடிய பந்து-கையாளுதல் மற்றும் கடந்து செல்லும் திறனைக் கொண்டுள்ளார் (ball-handling and passing ability).

தனது உயரத்தை (height) பயன்படுத்தி, பந்து கடந்து செல்லும் பாதைகளைக் கண்டுபிடித்து, தனது அணியினருக்காக வெற்றிப்பாதையை உருவாக்குகிறார். அவரது ஷூட்டிங் திறனைப் பற்றி இன்னும் ஒரு கேள்விக்குறி உள்ளது. குறிப்பாக ஃப்ரீ-த்ரோ (ree-throw) வரிசையில் இருந்து, கடந்த பருவத்தில் மக்காபி டெல் அவிவ் அணிக்காக 59 தோற்றங்களில் பந்தை செலுத்தினார். ஆனால் அவர் மேற்கொண்ட முயற்சிகளில் வெறும் 58 சதவீதத்தை மட்டுமே டெனி அவ்டிஜா அடித்தார்.

மிகப்பெரிய ஸ்டில் – மலாச்சி ஃபிளின்:

இந்த வரைவில் மிகப்பெரிய ஸ்டில் எனும் வீரராக டொராண்டோ ராப்டர்ஸ் அணியை சேர்ந்த சான் டியாகோ மாகாணத்தில் இருந்து வந்த மலாச்சி ஃபிளின் (Flynn) என்ற வீரர். இவர், 6-அடி -1 கார்ட் (Guard) வலுவான பிளேமேக்கிங் மற்றும் ஸ்கோரிங் திறனை கொண்ட இவர், சராசரியாக 17.6 புள்ளிகள், 4.5 ரீபவுண்டுகள் மற்றும் 5.1 அசிஸ்ட்கள் பெற்றார். மேலும், பந்தை மற்றவர்களிடம் இருந்து எடுத்து, தனது அணிக்காக கோல் அடிக்கும் திறனை கொண்டவர்.

மிகப்பெரிய ரீச் – பேட்ரிக் வில்லியம்ஸ்:

அதேபோல, மிகப்பெரிய ரீச் எனும் பெயரை சிகாகோ புல்ஸ் அணியின் வீரரான பேட்ரிக் வில்லியம்ஸ் எடுத்தார். 6-அடி, 8-ல் நிற்கும் வில்லியம்ஸ், வென்டெல் கார்ட்டர் ஜூனியர் மற்றும் லாரி மார்க்கனனுடன் சிகாகோவில் சில நிமிடங்கள் போரிடுவார். இதனால் அவர் எந்த வகையாக ஆடுவார் என்பதை கணிக்க கடினமாக இருக்கும். இந்தாண்டு இளம் வீரர்களே அதிகளவில் இருப்பதாக NBA கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu