கால்பந்தாட்ட வெற்றியை கொண்டாட தேசிய விடுமுறை.! சவுதி அரேபிய அரசின் சூப்பரான அவிப்பு.!
ஃபிஃபா உலகக்கோப்பையில் அர்ஜென்டினா வெற்றியைக் கொண்டாடும் சவுதி அரேபியா இன்று தேசிய விடுமுறையாக அறிவித்த்துள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று வரலாறு படைத்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா அணி இரண்டு கோல்களை அடித்து ஆதிக்கம் செய்தது. அர்ஜென்டினா அணியை கோல் அடிக்கவிடாமல் சவுதி அரேபியா கோல்கீப்பர் சிறப்பாக தடுத்தார்.
போட்டியின் முடிவில் சவுதி அரேபியா 2-1 என்று அர்ஜென்டினாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் சவுதி அரேபியா நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அர்ஜென்டினாவுக்கு எதிரான இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் இன்று (புதன்கிழமை) தேசிய விடுமுறையாக அறிவித்துள்ளார்.