நார்வே செஸ் : இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரின் 3 சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா 4வது சுற்றில் அமெரிக்க செஸ் ஜாம்பவானான ஹிக்காரு நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நகமுரா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி, பிரக்ஞானந்தாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
இறுதியில், நேரம் முடிவடையும் நிலையில் பிரக்ஞானந்தா தவறு செய்தார் அதை சரியாக பயன்படுத்தி நகமுரா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஹிக்காரு நகமுரா 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், முதல் போட்டியில் வெற்றி கண்டு, பிறகு டிங் லிரினுடன் தோல்வி கண்ட பிரக்ஞானந்தா, 3-வது சுற்றில் கார்ல்சனை கிளாசிக்கல் முறையில் முதல் முறையாக வெற்றி பெற்றிருந்தார். இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
தற்போது, இந்த தோல்வியின் மூலம் புள்ளிபட்டியலில் 5.5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறார். நார்வே செஸ் தொடரின் 6-வது சுற்று இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழக செஸ் வீரரான பிரக்ஞானந்தா, இத்தாலி நாட்டின் செஸ் வீரரான பாபியானோ கரோனாவுடன் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…