இணையத்தில் வைரலாகும் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் பதிவு!

suryakumar yadav

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2024 ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர்  ஹர்திக் பாண்டியாவை நியமித்த பிறகு, ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்கள் எதிர்வினைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரோகித் சர்மா கடந்த 2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்ந்தது. ஆனால், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சாதனையை சமன் செய்தது. இந்த சூழலில், ஹர்டிக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால், ரோகித் ஷர்மாவின் கேப்டன்சி சகாப்தத்தின் முடிவு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

பிரபல ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன் அணியிடமிருந்து வாங்கப்பட்ட பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக அடியெடுத்து வைத்துள்ளார். இந்த சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு என்பது எதிர்காலம் குறித்த முடிவாகும். இதற்கு சிலர் வரவேற்பு அளித்து வரும் நிலையில், சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தென்னாபிரிக்கா தொடரில் இருந்து முகமது ஷமி, தீபக் சாஹர் நீக்கம்… பிசிசிஐ அறிவிப்பு!

இதில், குறிப்பாக ரோகித் சர்மா ரசிகர்களுக்கும், மும்பை அணியின் ரசிகர்களுக்கும், அணி வீரர்களும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமாரின் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அவரது எக்ஸ் தள பக்கத்தில் இதயம் உடைந்தது போல் எமோஜியை பதிவிட்டுள்ளார். ஆனால், காரணம் தெரியவில்லை.

இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு குறித்து தான் இருக்கும் என தெரியவருகிறது. ஏனென்றால், இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், கேப்டனாக தன்னை பற்றி யோசிக்கவில்லை என விரக்தியில் கூட அப்படி பதிவிட்டிருக்கலாம் அல்லது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து எடுத்தது தொடர்பாகவும் மனமுடைந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுபோன்று, ஹர்திக் பாண்டியாவை ட்ரேடிங் மூலம் வாங்கியபோது, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா எதிர்வினையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் விவகாரம் தொடர்பாக ரோகித் ஷர்மாவின் ஆலோசனை இல்லாமல் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க அணியின் எதிர்காலம் குறித்தே எடுக்கப்பட்ட முடிவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested