உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை நேற்று அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. தற்போது இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். அப்போது, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி, கேப்டனாகவும் நியமித்தது. குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அந்த அணியை விளையாடிய இரு தொடர்களும் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று, அதில் ஒரு சாம்பியன் பட்டத்தை பெற்று அசத்தினார்.
இந்த சூழலில் 2024 ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதனால், ஒவ்வொரு அணியிலிருந்து வீரர்களை விடுவித்தல், வீரர்களை பரிமாற்றம் செய்தல் போன்றவை அணிக்குள்ளாகவே நடைபெற்றது. அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இதையடுத்து ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில், ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான followers குறைந்துள்ளனர். இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக followers கொண்ட ஐபிஎல் அணியாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025