சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட எம்எஸ் தோனி.!

SunilGavaskar - MSDhoni

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட தல தோனி.

2023 இந்தியன் பிரீமியர் லீக் கின் 16-வது ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரவு 7.30 மணி அளவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.

முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இறுதியில், ராணா மற்றும் ரஸல் களத்தில் நிற்க, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், இந்த சீசனில் சொந்த மண்ணில் அதாவது சேப்பாக்கத்தில் CSK அணி விளையாடும் கடைசி ஆட்டம் என்பதால், மைதானத்தில் ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களை வரவேற்க காத்திருந்தனர். போட்டி முடிந்த பிறகு, CSK அணி வீரர்கள் சேப்பாக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், மைதானத்தை சுற்றி வலம்வந்தனர்.

அப்போது, ஒரு பக்கம் பேட்டி அளித்துக்கொண்டிருந்த சுனில் கவாஸ்கர், தோனி தன் அருகில் வருவதைக் கண்டதும் திடீரென கேமராவை விட்டு விலகி, தோனியிடம் சென்றார். தோனியிடம் பேனாவை கொடுத்து ஆட்டோகிராப் போடும் படி கேட்டுக்கொண்டார்.

பின்னர், கவாஸ்கரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தோனி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்டார்.  பின்னர், இருவரும் அன்பான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்