இந்தியா ,தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடை பெற்றது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
பின்னர் தென்னாபிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது . இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 191 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது இன்னிங்சில் முகமது ஷமி 5 விக்கெட் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தது. மேலும் முகமது ஷமி டெஸ்ட் போட்டியில் இதுவரை இரண்டாவது இன்னிங்சில் 4 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஒரு முறை முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…